பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு
Advertisement
Advertisement
பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு
அக் 22, 2025
அ நிறம் | அளவு
Advertisement
முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் "இரண்டு வானம்" எனும் புதிய படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் பெரும்பாலான படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தியுள்ளனர். முழுக்க முழுக்க காதல் மற்றும் அட்வென்சர் ஜானரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதற்காக படக்குழு திட்டமிட்டுள்ளனர் என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!