பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் தரிசனம் செய்த த்ரிஷா
மே 04, 2026
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா இன்று அவரது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாலை திருப்பதியில் சுப்ரபாத தரிசனம் செய்துள்ளார். இதற்காக நேற்று இரவே கார் மூலம் திருப்பதி சென்றார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் திருப்பதி சென்று தரிசனம் செய்த த்ரிஷா, மீண்டும் இன்று சென்றுள்ளார். அவரது பிறந்தநாள் ஒரு பக்கம் இருந்தாலும் இன்று தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகிறது.
நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்படுவதால் அவர் பற்றிய செய்திகள் தற்போது பரபரப்பாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டா தளத்தில் "ஹாட்டின்" எமோஜியுடன் அவர் "மே எனது மாதம்" என்று பதிவிட்டிருந்தார். இந்த மாதத்தை அவர் சிறப்பானதொரு மாதமாகக் கொண்டாடி முடிவு செய்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. அதில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!