29 படத்தின் கதை இதுதான் : நாயகி ப்ரீத்தி அஸ்ராணி தகவல்
மே 05, 2026
Advertisement
மேயாதமான், ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் " 29". விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் வருகிற 8ம் தேதி வெளியிடுகிறது.
படத்தில் நடித்தது பற்றியும், படத்தின் கதை பற்றியும் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி கூறியிருப்பதாவது : இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் விஜி. இது ஒரு லவ் ஸ்டோரி, 29 வயதில் உள்ள சத்யா. 21 வயதான பெண் விஜி. இந்த வயது இடைவெளியை தெளிவாக சொல்லி இருக்கிறோம். ஏனெனில் 21 வயதான விஜி கேரக்டருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதில் கவனமாக உள்ள பெண். அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உள்ளது.
ஆனால் சத்யாவிற்கு எந்த ஒரு நோக்கமும் இல்லை. அவருக்கு விஜி மட்டும்தான் அவருடைய வாழ்க்கையின் ஒரே நோக்கம். நம்முடைய வாழ்க்கையில் யாரேனும் ஒருவர் வந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள். அதேபோல் சத்யாவின் வாழ்க்கையில் விஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறாள்.
கண்டிப்பாக இந்த லவ் ஸ்டோரியை பார்க்கும் போது ரசிகர்கள் எளிதாக தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இந்தப் படம் சத்யா மற்றும் விஜியின் அழகான வாழ்க்கை பயணம். எனக்கு எப்போதும் இதை போல் அசலான உண்மையான இயற்கையான அடுத்த வீட்டு பெண் போன்று தோன்றும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புவேன். கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும், அதை திரையில் வெளிப்படுத்துவது கடினம். இது போன்றதொரு சவாலான கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி.
இந்தக் கதை 2010ம் ஆண்டின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த காதல் அப்பாவித்தனமாகவும், இயல்பாகவும், நேர்மையானதாகவும் இருக்கும். அதை நாங்கள் உணர்ந்தோம். அதனை படத்தை பார்க்கும் போது ரசிகர்களும் உணர்வாகள்.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளாகட்டும் வசனங்களாகட்டும் எல்லாமே நன்றாக இருக்கும். ரசிகர்களை உணர்வுபூர்வமாக ஈர்க்கும். இது போன்றதொரு அழகான விஜி எனும் கேரக்டருக்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும் என் மீது நம்பிக்கை வைத்து உற்சாகம் அளித்த இயக்குநருக்கு நன்றி. என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!