
நெல்லை கணேஷ், டெல்லி கணேஷ் ஆன கதை...!
காத்தாடி ராமமூர்த்தி உதவியால் டவுரி கல்யாணம் என்ற நாடகத்திலும், பாலச்சந்தர் அறிமுகத்தால் பட்டினப்பிரவேசம் என்ற படத்தில் முதலில் நடித்தார். அவர் நடிப்பு டயலாக் பேச்சு வித்தியாசமாக இருக்க, அவருக்கான வாய்ப்பு தேடி வந்தது. டில்லியில் இருந்து வந்தவர் என்பதால் டெல்லி கணேஷ் ஆனார்
பாலச்சந்தர், கமல் ஆகியோரின் ஆஸ்தான நடிகரானார் டெல்லி கணேஷ். பாலச்சந்தரின் சிந்து பைரவி, கமலின் நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.
காமெடி வேடம் மட்டுமல்ல குடிசை, பசி போன்ற படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்தார் இந்த படங்களுக்காக அவர் விருதும் பெற்றார்.
இயல்பான பேச்சு, கொஞ்சம் கிண்டலான டயலாக் அப்பாவியான உடல் மொழி, வயதுக்கு மீறிய வேடம், பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றம் போன்றவை டெல்லி கணேஷின் பலம்.
படங்கள், டிவி சீரியல், வெப் சீரிஸ், விளம்பரங்கள் என கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கலைத்துறையில் இருந்தார். கலைமாமணி, நடிகர் சங்க சாதனையாளர் விருது பெற்றார்.
தமிழ் சினிமாவில் சமையல்காரர் வேடம் என்றால் டெல்லி கணேஷ் தான் நினைவு கூறுவார்கள். ஆஹா, புன்னகை மன்னன், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் சமையல்காரராவே வாழ்ந்திருப்பார்.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக நடித்த ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
விசு, எஸ்வி சேகர், காத்தாடி ராமமூர்த்தி போன்றவர்கள் இவருடைய முக்கியமான தோழர்கள். இவர் மகன் மகா, ‛என்னுள் ஆயிரம்" படத்தில் ஹீரோவாக நடித்தார்.
சின்ன படங்கள், சின்ன ஹீரோ, புது மாடல் என பாகுபாடு பார்க்காமல் நடிப்பது அவர் ஸ்டைல். அவ்வை சண்முகி, தெனாலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, லண்டன், தமிழன், பாபா உட்பட பல படங்களில் சிறப்பாக நடித்தார்.
தனது வாழ்க்கையை பேஸ்புக்கில் எழுதியவர் பின்னர் புத்தமாக வெளியிட்டார். நாடகம், சினிமா, வெப் சீரியஸ், விளம்பரம், கருப்பு வெள்ளை படம், வண்ண படம், குறும்படம் என பல தளங்களில் முத்திரை பதித்தார்.
வயதான நேரத்தில் கூட சினிமாவுக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து நடித்து வந்தார். 2024ல், தனது 80 வது வயதில் சென்னையில் காலமானார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!