
பிளாஷ்பேஷ் : சிவாஜி படத்தை தோற்கடித்த சிவாஜி படம்
இதே "பாசமலர்" படம்தான் சிவாஜியின் இன்னொரு படத்தை தோற்கடித்தது. அது இதே ஆண்டில் பாசமலர் வெளியான 3 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த "எல்லாம் உனக்காக" என்ற படம். இந்த படத்தில் சிவாஜியும், சாவித்ரியும் காதலர்களாக நடித்தார்கள். கதைப்படி சிவாஜி தன் காதலிக்காக எதையும் செய்பவராக நடித்தார். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் சுப்பாராவ் இயக்கினார்.
"பாசமலர்" தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும்போதே இந்த படம் வெளிவந்தது. அண்ணன் தங்கையாக சிவாஜி, சாவித்ரியை பார்த்து உருகிய ரசிகர்கள் இருவரையும் காதலன், காதலியாக பார்த்து ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்அப்போது நடிகர் சங்க தலைவராக எம் ஜி ஆர் இருந்தார். எல்லாம் உனக்காக படம் எப்படி தோல்வி கண்டது என்று மாதாந்திர கூட்டத்தில் அலசப்பட்டது. முடிவில் எம் ஜி ஆர் தான், அண்ணன் தங்கையாக பார்த்த சிவாஜி சாவித்திரி ஜோடியை காதலன் காதலியாக பார்க்க மக்கள் விரும்பவில்லை , அதனால் அடுத்து ஓராண்டுகாலத்துக்காவது தம்பி சிவாஜி, சாவித்திரியுடன் எந்த படத்திலும் நடிக்காமல் இருப்பது நல்லது என்று கூறினார். அடுத்து சாவித்திரிக்கு வந்த படங்கள் அனைத்திலும் ஜெமினி ஜோடி சேர்ந்தார். சிவாஜிக்கு பத்மினியும் தேவிகாவும் ஜோடியாயினர்