
தக்லைப் படத்தின் விண்வெளி நாயகா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது!
ஜூன் 02, 2025
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் "தக்லைப்". வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அனைத்து பாடல்களும் வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "விண்வெளி நாயகா" என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இந்த பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். ராப் பகுதியை பிரசாத் வெங்கட் எழுத, ஏ.ஆர்.அமீன் பாடி உள்ளார். இந்த பாடல் கமல்ஹாசன், திரிஷாவின் ரொமான்டிக் பாடல் என்றும் கூறப்படுகிறது. விண்வெளி நாயகா, விடியல் வீரா, உயிரின் மேல் விரிந்திடவா வா என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல் மற்றும் புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!