பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு
ஏப் 16, 2025
Advertisement
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு பின் நடிகர் தனுஷ் இயக்கி வரும் படம் "இட்லி கடை". இதில் அவரே நாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக நித்யா மேனனும், முக்கிய வேடத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர். "டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்" ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. தற்போது மீதமுள்ள காட்சிகளை படமாக்க பாங்காக் செல்கின்றனர். பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய் ஆகியோர் பாங்காக் செல்லும் போட்டோ வெளியாகி உள்ளது. இதையடுத்து நாளை தனுஷ், ஷாலினி பாண்டே மற்றும் குழுவினர் செல்ல உள்ளனர். வசன காட்சிகளுடன் பாடல் காட்சி ஒன்றும் அங்கு படமாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி அன்று ரிலீஸாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!