
ஏழு பெண்களின் பிரச்னைகளை பேசும் விதமாக ‛கமல் ஸ்ரீதேவி பெயரில் வெளியாகி உள்ள படம்
செப் 21, 2025
Advertisement
பொதுவாக பிரபல ஹீரோக்கள் நடித்த ஹிட் படங்களின் பெயர்களை மீண்டும் தங்களது படங்களுக்கு வைப்பதற்கு இன்றைய தலைமுறையினர் நிறையவே ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி பட டைட்டில் கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் நடித்த கதாபாத்திர பெயர்களை வைப்பார்கள். கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் அப்படித்தான் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்களான ‛பில்லா ரங்கா பாட்ஷா" என்கிற பெயரிலேயே ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்னும் ஒருபடி மேலே போய் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஜோடியான கமல் ஸ்ரீதேவி பெயரிலேயே கன்னடத்தில் தற்போது ஒரு படம் வெளியாகி உள்ளது. டைட்டில் பரபரப்புக்காக கமல் ஸ்ரீதேவி என பெயர் வைக்கப்பட்டாலும் கூட இந்த படம் வித்தியாசமான பிரச்னைகளை சந்திக்கும் ஏழு பெண்களும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் மையப்படுத்தி ஒரு மர்டர் மிஸ்ட்ரியாக தான் உருவாகி உள்ளது. இந்த வாரம் வெளியாகியுள்ள இந்த படத்தை வி.ஏ சுனில் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!