கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா
மே 20, 2026
Advertisement
திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் படம் “தாழ் திறவா”. பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இந்த படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் முயற்சியாக படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!