
வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு
மார் 09, 2026
Advertisement
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்த தாய் கிழவி படம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது மட்டுமல்ல, இதுவரை முப்பது கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி உள்ளது. கடந்த வாரமே தாய்கிழவி பட குழுவினர் கேக் வெட்டி அந்த வெற்றியை கொண்டாடி உள்ளனர். மேலும் மகளிர் தினமான நேற்று தமிழகத்தில் பலரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்ட்ஸில் தாய்கிழவி படத்தில் பெண்கள் குறித்து ராதிகா பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இதுவும் படக்குழுவை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தாய்கிழவி படத்தின் வெற்றி விழாவை சென்னையில் பெரிய அளவில் கொண்டாட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இந்த படம் நல்ல லாபத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளதால் அவரும் வெற்றியை கொண்டாட ஆசைப்படுகிறார் அந்த விழாவில் படத்தில் பங்குபெற்ற சென்னை மற்றும் மதுரை சேர்ந்த நடிகர்களும் , தொழில் நுட்ப கலைஞர்களும் பங்கு பெற உள்ளனர். தமிழ் சினிமாவில் தம்பி தலைவர் தலைமையில் படத்துக்கு பின் இந்த ஆண்டு இரண்டாவதாக இந்த படத்தின் வெற்றி விழா நடக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!