அமெரிக்காவில் தமிழ் அமைப்பு மாநாடு : திரைப்பட விழா, ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடக்கிறது
ஜூன் 28, 2026
Advertisement
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் நியூ ஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து பேரவையின் 39 வது தமிழ் விழாவை நடத்துகிறது. நியூஜெர்சியில் உள்ள நியூஜெர்சி கன்வென்சன் மற்றும் எக்ஸ்போசிசன் மையத்தில் வரும் ஜூலை 2, 3, 4 ஆகிய நாட்களில் இவ்விழா நடக்க உள்ளது. கருத்தரங்கம், கவியரங்கம், திரைப்பட விழாக்கள், இசை நிகழ்ச்சி, தொழில்நுனைவோர் நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், கலாச்சார திருவிழா, விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். கலைத்துறையை பொருத்தமட்டில் ஜூலை 2ம் தேதி பெட்னா சர்வதேச திரைப்பட திருவிழா நடக்கிறது. இதில் சிறந்த திரைக்கலைஞர்களின் படைப்புகள் கவுரவிக்கப்பட உள்ளது. இதில் விதார்த், தங்கர் பச்சான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜூலை 3ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கவியரங்கம் நடக்கிறது. இதில் லெனின் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஜூலை 4ம் தேதி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. தவிர்த்து புகழ், ஹேமா, சுஜிதா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!