
எம்புரான் படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம்
இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற முல்லை பெரியார் அணை குறித்த கருத்துகளுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். படத்தில் "நெடும்பள்ளி டேம்" என்ற பெயரில் முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகல்களை படம் பரப்புவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
படத்தில் மஞ்சுவாரியர் ஒரு காட்சியில், "நாம் பிறப்பதற்கு முன்பே, ஒரு ராஜா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அஞ்சியதால், 999 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து, நெடும்பள்ளி அணை கட்டப்பட்டது. ராஜாக்களும் ஆக்கிரமிப்பு சக்திகளும் நாட்டை விட்டு சென்ற பின்பும், இன்றும் ஜனநாயகத்தின் பெயரில் நம்மை அடக்கி ஆளுகிறார்கள். இந்த அணையின் அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது.
"அணையை காப்பாற்ற தற்காலிகச் சுவர்களால் பயன் இல்லை. அணையே இல்லாமல் இருப்பதே சிறந்த தீர்வு" என்கிற வசனமும் அதில் இடம் பெற்றுள்ளது.
இதனால் "எம்புரான்" படத்திற்கு எதிராக தமிழக விவசாயிகள் போராடுகிறார்கள். நேற்று மதுரை, தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!