
சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை
தனது பயோபிக் தொடக்கவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் காஜிமா. இவர் கேரக்டரில் கன்னட திரையுலகை சேர்ந்த ரந்தியா பூமேஷ் நடிக்கிறார். முரளி இயக்குகிறார். காஜிமா தந்தையாக காளி வெங்கட் நடிக்கிறார். நாகேஷ் பாட்டில் தயாரிக்கிறார்.
இந்த விழாவில் காஜிமா பேசுகையில், ""விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது அப்பா இரவு பகலாக ஆட்டோ ஓட்டி அந்த பணத்தை சேர்த்தார். நான் கடுமையாக உழைத்து போட்டிகளில் வெற்றி பெற்றபின் அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெற வைக்க முடியும். முயற்சியை விடாமல் தொடர வேண்டும். பல படங்களில் காளி வெங்கட்டை பார்த்து இருக்கிறேன். இன்றுதான் அவரை நேரில் பார்க்கிறேன். என் அப்பாவாக அவர் நடிப்பது மகிழ்ச்சி. என் சகோதரனும் என்னை போல் கேரம் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறான். பலருக்கு பயிற்சி கொடுக்கிறான். அவனும் இந்த படத்தில் நடிக்கிறான்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…