
மழையில் ஆட்டம் போட்டு குளிரில் நடுங்கி போன தமன்னா
மும்பை லோகண்ட் வாலாவில் வாங்கிய தனது உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் தமன்னா. இந்த வீட்டின் உட்புற வடிவமைப்புகள் பெரும்பாலும் தனது தந்தையால் வடிவமைக்கப்பட்டவை என்றும், இதனால் இந்த இடம் தனக்கு இன்னும் சிறப்பானது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மும்பையின் மழைக்காலத்தை நடிகை தமன்னா முழுமையாக ரசித்து வருகிறார். தனது ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து மழையை ரசிப்பது போன்றும், மழையில் நனைந்தபடியும், குளிரில் நடுங்கியபடியும் உள்ள ஒரு மகிழ்ச்சியான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சாதாரண உடையில் இருந்த தமன்னா, சிரித்தபடியும், நடனமாடியபடியும், புத்துணர்ச்சியூட்டும் மழை சீசனை அனுபவிப்பது தெரிகிறது. அந்த வீடியோவை பகிர்ந்த அவர், எனக்கு இன்னும் குளிராக இருக்கிறது என்று தலைப்பிட்டு, மழை பெய்து முடிந்த பிறகும் அந்த மழைக்கால குளிர் நீடிப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!