
சந்தீப் கிஷன் நடிக்கும் கரிகாலா: 3 மாதத்தில் இரு பாகங்கள் வெளியிடுவதாக அறிவிப்பு
சந்தீப் கிஷன் தற்போது முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய "சிக்மா" படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சந்தீப் கிஷன், ஷைனிங் பிக்சர்ஸ் தயாரிப்பில் உகந்தர் முனி இயக்கத்தில் தனது 33வது படத்தில் நடித்து வந்தார்.
அந்த படத்திற்கு "கரிகாலா" என தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படம் பேண்டசி ஜார்னரில் தயாராகிறது. படம் இரு பாகங்களாக வெளியாகும் என்றும், முதல் பாகம் அடுத்தாண்டு ஜூலை 2ம் தேதியும், 2ம் பாகம் அடுத்தாண்டு அக்டோபர் 28ம் தேதியும் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதாவது, 3 மாத இடைவெளியில் படத்தின் இரு பாகங்களையும் வெளியிடுகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!