
எம்ஜிஆருக்கு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், விஜய்க்கு ஜனநாயகன்
எம்ஜிஆரை விடவும் அதிக ஓட்டு சதவீதத்தைப் பெற்று இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஆகப் பதவியேற்றவர் நடிகர் விஜய். எம்ஜிஆருக்கு அடுத்து எத்தனையோ நடிகர்கள் அரசியலில் இறங்கினாலும் அவருக்கு அடுத்து முதல்வராகும் வாய்ப்பு விஜய்க்கு மட்டும்தான் கிடைத்துள்ளது.
விஜய் முதல்வர் ஆவதற்கு முன்பாகவே அவர் கடைசியாக நடித்த "ஜனநாயகன்" படம் வந்திருக்க வேண்டும். ஆனால், தணிக்கை சான்றிதழ் பிரச்னை காரணமாக ஆறு மாத தாமதத்திற்குப் பின் நாளை ஜூலை 23ல் வெளியாகிறது.
எம்ஜிஆர் முதல்வராகப் பதவியேற்ற பின்பு வெளிவந்த "மீனவ நண்பன்" படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. கடைசி படமாக வந்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படம் தோல்வியைத் தழுவியது. அவர் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் என்ற பெருமை மட்டும் இப்படத்திற்கு உண்டு.
விஜய்யின் கடைசி படமான வர உள்ள "ஜனநாயகன்" எப்படி அமையப் போகிறது என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!