பூச்சி முருகனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள்
ஆக 07, 2026
Advertisement
திமுக தலைமை நிலைய செயலாளரும், நடிகரும், நடிகர் சங்கத்தின் துணை தலைவரான பூச்சி முருகன், கடந்த ஜூலை மாதம் நண்பர்களுடன் கொடைக்கானல் வந்தபோது ஓட்டலில் திடீரென மயக்கம் அடைந்தார். மதுரையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தக் கசிவு பிரச்னை இருந்தது. கடந்த ஒருமாதமாக சிகிச்சையில் உள்ள அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து திமுக., தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்த அவர், விரைவில் முழுமையாக குணமடைந்து பொதுப்பணிக்குத் திரும்ப வேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.
இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் ஆகியோறும் நேரில் சந்தித்து நலன் விசாரித்தனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!