இரண்டே நாளில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த ஸ்பைடர்மேன்
ஆக 01, 2026
Advertisement
இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகியும், ஆங்கிலத்தில் நேரடியாகவும் ஜூலை 30ல் வெளியான படம் "ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே".
இப்படம் முதல் நாளில் 70 கோடி வசூலைக் கடந்ததாக நேற்று காலையிலேயே நாம் சொல்லி இருந்தோம். அதற்கடுத்த சில மணி நேரங்களில் சோனி பிக்சர்ஸ் இந்தியா முதல் நாளில் 73 கோடி வசூல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இரண்டாம் நாள் வசூலுடன் சேர்த்து தற்போது 110 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. இன்று, நாளைய வசூலுடன் சேரத்தால் 200 கோடியை நிச்சயம் கடந்துவிடும் என்கிறார்கள்.
முதல் நாள் வசூலில், "அவஞ்சர்ஸ் எண்ட்கேம்" வசூலை முறியடித்தது, ஸ்பைடர்மேன் சீரிஸ் படங்களில் அதிக வசூலைப் பெற்றது, இந்தியாவில் 5000 திரைகளில் வெளியீடு, என புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த "தி ஒடிஸி" சமீபத்தில் 100 கோடி வசூலைக் கடந்தது. இந்த ஆண்டில் இந்தியாவில் 100 கோடி வசூலைக் கடந்த முதல் படமாக அமைந்தது. தற்போது "ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே" இரண்டாவது படமாக அமைந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!