அமீர் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சூரி!
Advertisement
Advertisement
அமீர் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சூரி!
ஜன 12, 2022
அ நிறம் | அளவு
Advertisement
காமெடி நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக சூரி நடிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக அமீர் இயக்கும் புதிய படத்திலும் சூரி நாயகனாக நடிக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. விடுதலை படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கார்த்தியின் விருமன், சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களில் காமெடியனாகவும் நடித்து வருகிறார் சூரி.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!