கென் கருணாஸ் மீது பாடல் திருட்டு புகார்
மார் 25, 2026
Advertisement
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ள படம் "யூத்". இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இடம்பெற்ற "ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா" என்ற கானா பாடல் ஹிட் அடித்துள்ளது. பலரும் இதனை ரிங்டோனாக வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் அந்த பாடல் தனது சொந்த பாடல் என்றும், அதை எனது அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளனர் என்றும் கானா தினேஷ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் , "நான் ஆசப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா" என்ற தனது பிரபல கானா பாடலை, எந்த அனுமதியும் பெறாமல் "யூத்" திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்த பாடல் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒன்று. என் பாடலை பயன்படுத்துவதற்கு முன் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இது உரிமை மீறல், இதனால் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதற்குரிய இழப்பீட்டை தர வேண்டும்” என்று அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!