அண்ணனின் கள்ளக்காதலை தடுக்கும் சகோதரிகள் : பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர் தொடரின் கதை
மே 20, 2026
Advertisement
வருகிற 27ம் தேதி முதல் ஜியோ ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் வெப் தொடர் "பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்". போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி ஆகியோர் நடித்திருக்கும் இந்த தொடரை, "உப்பு புளி காரம்" மற்றும் "போலீஸ் போலீஸ்" போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். கள்ள காதலில் சிக்கியுள்ள அண்ணனை மீட்கும் தங்கைகளின் கதையாக இந்த தொடர் உருவாகியுள்ளது.
இது குறித்து ஓடிடி தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பது: இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (போஸ் வெங்கட்), அவரின் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கும் அதிர்ச்சி உண்மை வெளிப்படுகிறது. இதையடுத்து, குடும்பம் பிரியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சகோதர சகோதரிகள் ஒன்றிணைகின்றனர். அதை அவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது தான் கதை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!