விரைவில் ராணா நாயுடு சீசன்2 வெப்சீரிஸ் படப்பிடிப்பு துவக்கம்
மார் 08, 2024
Advertisement
பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ராணா. அதைத்தொடர்ந்து அவரைப் பெரிய அளவில் முன்னணி நடிகராக உயர்த்தி பிடிக்கும் அளவிற்கு அவருக்கு படங்கள் எதுவும் அமையவில்லை. அதனால் வெப்சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திரும்பிய ராணா கடந்த வருடம் வெளியான "ராணா நாயுடு" என்கிற வெப்சீரிஸில் நடித்தார். இதில் இவருடன் நடிகர் வெங்கடேஷும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தார். சுபன் வர்மா என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த வெப் சீரிஸில் அதிகப்படியான கெட்ட வார்த்தைகள் பேசப்பட்டதற்காக கடுமையான விமர்சனங்களை இந்த வெப்சீரிஸ் வெளியான சமயத்தில் சந்தித்தது. ஆனாலும் ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் வரும் மார்ச் 25ம் தேதி இந்த வெப் சீரிஸில் இரண்டாவது சீசன் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் ராணா இணைந்து நடித்து வருகிறார். இதனை முடித்துக் கொடுத்துவிட்டு "ராணா நாயுடு-2" படப்பிடிப்பில் இணைய உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!