
ரஜினியின் ஜெயிலர் - 2 படத்தில் சந்தானம்?
மே 26, 2025
Advertisement
சந்தானம் நடிப்பில் கடைசியாக "டிடி நெக்ஸ்ட் லெவல்" என்ற படம் திரைக்கு வந்தது. அதையடுத்து சிம்புவின் 49வது படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம். அதோடு, சிம்புவுக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர்-2 படத்திலும் சந்தானத்தை காமெடி கலந்த ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ரஜினி நடித்த "எந்திரன், லிங்கா" போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ள சந்தானம், இந்த ஜெயிலர்-2 படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடிக்க சம்மதிப்பாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!