
தமிழில் நாயகி ஆனார் சானியா அய்யப்பன்
அக் 21, 2024
Advertisement
கடந்த 10 வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்து வந்தாலும் குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறார் சானியா அய்யப்பன், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் "குயின்" படத்தின் மூலம் நாயகி ஆனார். அந்த படத்திற்காக நிறைய விருதுகள் பெற்றார். "லூசிபர்" படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள அவர் தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர சல்யூட், சாட்டர்டே நைட், உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த ஆண்டு வெளியான "இறுகப்பற்று" அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள "சொர்க்கவாசல்" படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார்.
சிறையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், நட்டி, ஷரப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தின் கதையை தமிழ்ப்பிரபா மற்றும் அஷ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் எழுதியுள்ளார். மம்முட்டி நடித்த "பிரம்மயுகம்" படத்திற்கு இசையமைத்த கிறிஸ்டோ சேவியர் இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். சிறை வாழ்க்கையை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!