ராம் பொத்தினேனிக்கு ஜோடியாகும் சம்யுக்தா மேனன்
ஜூலை 10, 2026
Advertisement
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி முதல்முறையாக கதை எழுதி ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தை அவரின் ரெப்போ சினிமாடிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து , கதாநாயகனாக நடிக்கின்றார் . இது ராம் பொத்தினேனியின் 23வது படமாக உருவாகிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
இதில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அவர் அதிக சம்பளம் கேட்டதால் மறுபுறம் கயாடு லோஹர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவரும் மறுக்க, தற்போது ‛வாத்தி" பட நாயகி சம்யுக்தா மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!