பிறக்கப் போகும் குழந்தைக்கு ரசிகர் சொன்ன பெயரால் இம்ப்ரஸ் ஆன சமந்தா
ஆக 31, 2026
Advertisement
நடிகை சமந்தா தனது முதல் திருமணத்தில் இருந்து விடுபட்டு, பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமொருவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் குழந்தையை எதிர்பார்த்து அந்த அனுபவத்திற்காக காத்திருக்கிறார். பிறக்கும் குழந்தைக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிவிட்டதாகவும், ரசிகர்களிடம் "குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நீங்களும் உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்" என கேட்டுக் கொண்டார்.
உடனே பலரும் பல பெயர்களை கூறி வந்த நிலையில், ரசிகர் ஒருவர் ஆண் குழந்தை பிறந்தால் "சாம்ராஜ்" என்றும், பெண் குழந்தை பிறந்தால் "சமைரா" என்றும் பெயர் வைக்கலாம் என தனது ஆலோசனையை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, சமந்தாவின் பெயரில் இருக்கும் முதல் மூன்று ஆங்கில எழுத்துக்களையும், அவரது கணவரின் பெயரில் இருக்கும் முதல் மூன்று ஆங்கில எழுத்துக்களையும் எடுத்து இணைத்தால் "சாம்ராஜ்" என்கிற பெயர் வரும்; அதை சற்று மாற்றினால் பெண் குழந்தைக்கான "சமைரா" என்கிற பெயர் வரும்படியாக அவர் அந்தப் பெயர்களைக் கூறியிருந்தார்.
இதனைப் பார்த்து கலகலப்பான சமந்தா, "இது நம் மீது நாமே அதிகப்படியான பெருமை கொள்ளும் விதமாக இல்லையா ?" என்று ஒரு சிரிப்பு எமோஜியுடன் பதில் அளித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!