சோலோ ஹீரோயினாக சாக்ஷி அகர்வாலின் திரில்லர் படம்
ஏப் 13, 2026
Advertisement
ரூல் பிரேக்கர்கஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் "தீயோர் கூடம்". இதில் சாக்ஷி அகர்வால் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் டேனியல் ஆனி போப், வையாபுரி, சாம்ஸ், வசந்தி, ஜேஸ்பர், சத்யா மற்றும் சம்யுதா நடித்துள்ளனர். சக்திவேல் எழுதி, இயக்கி இருக்கிறார். வசந்த் இசைப்பேட்டை இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் டி.எப்.டி. ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது "கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையைக் கொண்டது. ஒரு வீட்டில் திடீரென நடக்கும் கொலை, அந்த சம்பவத்தில் சிக்கும் மூன்று பேர் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றனர் என்பதை திரில்லர் ஜானரில் பேசும் படமாக உருவாகி இருக்கிறது" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!