சலார் டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங்
மே 04, 2024
Advertisement
பான் இந்தியா நடிகர் என தெலுங்கு நடிகர் பிரபாஸை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். "பாகுபலி 2" படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த எந்த ஒரு பான் இந்தியா படமும் பெரிய அளவில் வசூலித்து வெற்றி பெறவில்லை. பல கோடிகள் நஷ்டத்தைத்தான் தந்தது. இருந்தாலும் தொடர்ந்து சில பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
"கேஜிஎப்" இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த "சலார்" படம் சமீபத்தில் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், அதன் டிஆர்பி ரேட்டிங் மிகவும் குறைவாக வந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 6.52 ரேட்டிங் மட்டுமே அதற்குக் கிடைத்துள்ளது.
தெலுங்கில் சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மற்ற படங்களைக் காட்டிலும் இதற்கு இவ்வளவு குறைவான ரேட்டிங் கிடைத்திருப்பது பிரபாஸ் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள்தான் அதற்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!