காந்தாரா கதாநாயகியை அன்பாலோ செய்த ரிஷப் ஷெட்டி
மார் 28, 2026
Advertisement
"காந்தாரா" மற்றும் "காந்தாரா சாப்டர் 1" ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. தற்போது பிரசாந்த் வர்மா இயக்கத்தில் "ஜெய் ஹனுமான்" படத்தில் நடித்து வருகிறார்.
ரிஷப் ஷெட்டி சமீபத்தில் "காந்தாரா" படங்களைத் தயாரித்த ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தை அவரது இன்ஸ்டா தளத்தில் "அன்பாலோ" செய்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வருதவற்கு முன்பே அடுத்து "காந்தாரா சாப்டர் 1" படத்தின் கதாநாயகியான ருக்மிணி வசந்த்தை "அன்பாலோ" செய்துள்ளார்.
அது மட்டுமல்ல "காந்தாரா" உருவாக்கத்தில் கூட இருந்து பணி செய்தவரும், அவரது நண்பரும் நடிகருமான ராஜ் பி ஷெட்டியையும் "அன்பாலோ" செய்திருக்கிறார். அவருக்கு நெருக்கமாக இருந்த தயாரிப்பு நிறுவனம், நடிகர், நடிகை என அடுத்தடுத்து அவர் "அன்பாலோ" செய்தது கன்னடத் திரையுலகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!