
ஸ்வீட் ஹார்ட் படத்தின் டப்பிங் பணியில் ரியோ ராஜ்
ஆக 06, 2024
Advertisement
நடிகர் ரியோ ராஜ், பிளான் பண்ணி பண்ணணும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியான ஜோ படம் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. தற்போது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் "ஸ்வீட் ஹார்ட்" எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். இதனை அறிமுக இயக்குனர் ஷிவ்னித் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சுழல் வெப் தொடரில் நடித்த கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். கடந்த 45 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடத்தி இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை ரியோ ராஜ் தொடங்கி உள்ளார். இதற்கான போட்டோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!