தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம்
ஜூன் 05, 2025
‛ஜெயம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ரவி, அந்தபடம் தந்த வெற்றியால் ‛ஜெயம்" ரவியாக வலம் வந்தார். 23 ஆண்டுகளில் வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணித்து, முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்தார். இருவரும் விவாகரத்து கேட்டுள்ளனர். இந்த வழக்கு சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கையை கடந்து சினிமாவில் ரவி அடுத்தடுத்து புதிய பாதையில் பயணிக்க உள்ளார். விரைவில் இயக்குனராக களமிறங்க உள்ள அவர், தனது முதல் படத்தை யோகி பாபுவை வைத்து இயக்க போகிறார்.
இந்நிலையில் அடுத்து தயாரிப்பாளராகி உள்ளார். தனது பெயரிலேயே ‛ரவி மோகன் ஸ்டுடியோஸ்" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!