எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு விருந்தளித்த ராம்சரண்
ஏப் 20, 2022
Advertisement
ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள், அதன்பிறகு ரிலீஸ் மற்றும் படத்தின் வெற்றி கொண்டாட்டாங்கள் எல்லாம் முடிந்த நிலையில், ஒரு தயாரிப்பாளராக தனது தந்தை சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் வேலைகளையும் முடுக்கி விட்டுள்ளார் நடிகர் ராம்சரண்.. அது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடிக்கவும் துவங்கியுள்ளார் ராம்சரண்.
சமீப நாட்களாக பஞ்சாப்பில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் முகாமுக்கு சென்ற ராம்சரண் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் சில மணி நேரங்கள் செலவிட்டு உரையாடியுள்ளார். ஆர்ஆர்ஆர் படம் அவரை ஏற்கனவே ராணுவ வீரர்களுக்கு நன்கு அறிமுகம் செய்துவிட்டதால் அவர்களும் ராம்சரணை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
அதுமட்டுமல்ல ஏற்கனவே செய்திருத்த முன்னேற்பாட்டின்படி அவர்களுக்கு அறுசுவை உணவுடன் தனது சார்பில் விருந்தும் அளித்துள்ளார் ராம்சரண். இதற்காக ஐதராபாத்தில் இருந்து தங்களது பிரத்யேக சமையல்காரரை வரவழைத்து உணவை தயார் செய்து வழங்கியுள்ளார் ராம்சரண்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!