
தென் கொரியா சுற்றுலா தூதுவராக பிரியங்கா மோகன் நியமனம்
ஜூன் 02, 2026
Advertisement
தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் மலையாள நடிகை பிரியங்கா மோகன். அவர் நடித்து ஓடிடியில் நேரடியாக வெளியான "மேட் இன் கொரியா" திரைப்படம் தென் கொரிய நாட்டைக் கதைக்களமாகக் கொண்டு வெளிவந்தது.
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்த போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்தில் பிரியங்கா மோகன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது தென் கொரிய நாட்டின் சுற்றுலா தூதராக பிரியங்கா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,
“இந்த அற்புதமான கவுரவத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கொரிய சுற்றுலாவின் கவுரவத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கொரிய கலாசாரத்தை இந்தியப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க உதவக் கூடிய ஒருவராக என்னை அங்கீகரித்த கொரிய அரசாங்கத்திற்கும் கொரிய சுற்றுலா அமைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கொரியாவின் கலாசாரம், பாரம்பரியங்கள் மற்றும் அதன் அன்பான உபசரிப்பு ஆகியவை எனக்கு எப்போதுமே உத்வேகம் அளித்துள்ளன. இந்த அழகான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நம்பிக்கை, கருணை மற்றும் அன்பான வரவேற்பு அளித்த கொரிய சுற்றுலா அமைப்பின் தலைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வரவிருக்கும் அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!