
தெலுங்கில் முதல் வெற்றியைப் பெற்ற பிரியா பவானி சங்கர்
தமிழ் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து, டிவி தொடரில் கதாநாயகியாக நடித்து, அதன்பின் சினிமாவில் கதாநாயகியாக வந்தவர் பிரியா பவானி சங்கர். இங்கு குறிப்பிடும்படியான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் 2023ல் வெளிவந்த "கல்யாணம் கமனீயம்" படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து 2024ல் "பீமா" படத்திலும், "ஜீப்ரா" படத்திலும் நடித்தார். ஆனால், அவை வெற்றிப் படங்களாக அமையவில்லை.
நேற்று வெளியான "இருமுடி" படத்தில் ரவி தேஜா மனைவியாகவும், 10 வயது சிறுமிக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். இப்படம் முதல் நாளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தெலுங்கில் தனது நான்காவது படத்தின் மூலம் வெற்றியைப் பார்த்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் கிடைக்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!