மமிதா பைஜூ படங்களில் தொடர்ந்து இடம்பிடிக்கும் பிரேமலு நடிகர்
ஜூன் 13, 2026
Advertisement
கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமலு. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜூ, இதன் மூலம் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகை வரிசைக்கு உயர்ந்துள்ளார்.. இந்த படத்தில் நாயகன் நஸ்லெனுடன் இணைந்து ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சங்கீத் பிரதாப்.. அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் போதே நாயகனை விட இந்த சங்கீத் பிரதாப்புடன் தான் மிகவும் நெருக்கம் காட்டி பழகி வந்தார் மமிதா பைஜூ.
இந்த நிலையில் சங்கீத் பிரதாப்புக்கு ஜோடியாக தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் மமிதா பைஜூ. அதுமட்டுமல்ல நிவின்பாலி, மமிதா பைஜூவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் "பெத்லகேம் குடும்ப யூனிட்" படத்திலும் சங்கீத் பிரதாப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படி மமிதா பைஜூவின் படங்களில் சங்கீத் பிரதாப் தொடர்ந்து இடம் பிடித்து வருவது மலையாள திரை உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!