ஒரு வழியாக பிரீத்தி அஸ்ரானிக்கு பட வாய்ப்பு கிடைத்தது
ஜன 02, 2024
Advertisement
கடந்த ஆண்டில் வெளியான "அயோத்தி" படம் பரவலான பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக அதில் சிறப்பாக நடித்த பிரீத்தி அஸ்ரானியின் நடிப்பு பேசப்பட்டது. சென்னையில் நடந்த சர்வதே திரைப்பட விழாவில் "அயோத்தி" சிறந்த படமாகவும், பிரீத்தி அஸ்ரானி சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரீத்தி அஸ்ரானி சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருந்தார்.
என்றாலும் ஒரு வெற்றி படத்தில் நன்றாக நடித்த பிறகும் அடுத்த சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் பிரீத்தி. "டாடா" படப் புகழ் கவின் தற்போது "ஸ்டார் "என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் "கிஸ்" என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கவின் ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என் தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…