
பிரபுதேவாவின் ‛பேட்ட ராப் : நாயகியாகும் வேதிகா
ஜூன் 01, 2023
Advertisement
நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா நடித்து சமீபத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அடுத்த புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். எஸ்.ஜே.சீனு இயக்கும் இந்த படத்திற்கு ‛பேட்ட ராப்" என்று தலைப்பு வைத்துள்ளனர். பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இடம் பெற்ற பாடலை வைத்து இந்த தலைப்பை வைத்துள்ளனர். நாயகியாக வேதிகா நடிக்கிறார். காஞ்சனா 3 படத்திற்கு பின் இந்த படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். ரியாஸ் கான், மைம் கோபி, பக்ஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் 15ம் தேதி முதல் துவங்குகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாக உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…