மோகன் ராஜா இயக்கத்தில்
கார்த்தி நடிக்கும் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் ஹீரோயினாக நடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் த்ரிஷாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதற்குமுன்பு பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக கார்த்தி நடிக்க, குந்தவையாக
த்ரிஷா நடித்தார். மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இதற்குமுன்பு மோகன்ராஜா இயக்கிய சம்திங் சம்திங் படத்தில் ரவி மோகன் ஜோடியாக த்ரிஷா நடித்து இருந்தார். முதலில் இந்த கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருந்தார். அவர் ஏற்கனவே கார்த்தியுடன் காஷ்மோரா படத்தில் நடித்தவர், ரவி மோகனுடன் தனி ஒருவன், வேலைக்காரன் படங்களில் பணியாற்றியவர். ஆனால், மார்க்கெட், கேரக்டரை கருத்தில் கொண்டு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்.
வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்the writer of this article must be kidding....talking about market