பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி
பிப் 10, 2026
Advertisement
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி திரைக்கு வந்த படம் சக்தி திருமகன். இது அவரது 25 வது படமாகும். இந்த படத்தை தயாரித்து இசையமைத்து நடித்திருந்தார் விஜய் ஆண்டனி. அதன்பிறகு தற்போது சசி இயக்கும் நூறு சாமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே மாதம் ஒன்றாம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்தில் நடித்த விஜய் ஆண்டனி அதன் பிறகு பிச்சைக்காரன் -2 படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். பிச்சைக்காரன் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்த நிலையை இரண்டாம் பாகம் சுமாராகத்தான் ஓடியது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய ஆண்டனியிடம் பிச்சைக்காரன் 3 படம் உருவாகுமா? என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு, பிச்சைக்காரன் 3 கண்டிப்பாக உருவாகிறது. பிச்சைக்காரன் 2 படத்தை விட பெரிய படமாக இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎப் படம் மாதிரி பிரமாண்டமாக இருக்கும் என்கிறார் விஜய் ஆண்டனி.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!