ஓ சுகுமாரி படத்தின் ஓடிடி உரிமம் விற்பனை
ஜூலை 07, 2026
Advertisement
தெலுங்கில் மசூதா என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகர் திருவீர். இவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடித்துள்ள படம் ஓ..! சுகுமாரி. இப்படம் வரும் ஜூலை 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் கதையை எழுதி, இயக்குநராக அறிமுகமாகிறார் பரத் தர்ஷன். நடிகர் திருவீரின் திரைப்பயணத்தில் இதுவே முதல் பன் மொழி திரைப்படமாகும்.
தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே, இதன் டிஜிட்டல் உரிமம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு, அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. எனினும், இதன் ஓடிடி வெளியீட்டுத் தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
ஓ..! சுகுமாரி ஒரு அழகான காதல் மற்றும் குடும்ப படமாக உருவாகியுள்ளது. இன்றைய தலைமுறை காதலில் சந்திக்கும் சுவாரசியமான திருப்பங்களையும், குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்டு நகைச்சுவை பாணியில் இயக்குநர் இக்கதையை அமைத்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!