
‛திரிஷ்யம் 3 படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்!
டிச 07, 2025
Advertisement
கடந்த 2013ம் ஆண்டில் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த படம் "திரிஷ்யம்". இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்தனர். தமிழில் கமல்ஹாசன் "பாபநாசம்" எனும் பெயரில் ரீமேக் செய்தார்.
அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் "திரிஷ்யம் 2" கொரோனா காலகட்டத்தினால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஹிந்தி, தெலுங்கிலும் ரீ-மேக் ஆனது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரிஷ்யம் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்தனர். இதன் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் பணிகளும் மறுபுறம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் உலகளவில் இந்த படத்திற்கான தியேட்டர் உரிமைகளும் மற்றும் டிஜிட்டல், சாட்லைட் போன்ற தியேட்டர் உரிமை அல்லாத உரிமைகளையும் பென் ஸ்டுடியோஸ், பெனரோமா ஸ்டுடியோஸ் என இரு நிறுவனங்களும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!