ஜிவி பிரகாஷை கழுத்து வரை மண்ணுக்குள் புதைத்து புதிய அறிவிப்பு
ஜூன் 13, 2026
Advertisement
ஜிவி பிரகாஷ் தமிழில் மட்டுமல்லாது தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி டைரக்ஷனில் நடிகர் வெங்கடேஷ் மற்றும் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து நடித்து வரும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் என்கிற தகவலை படக்குழுவினர் சற்றே வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.. வழக்கமாக இது போன்ற அறிவிப்புகளில் பர்ஸ்ட் லுக் அல்லது கிளிம்ப்ஸ் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
சற்றே வித்தியாசமாக இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பிரபல தெலுங்கு பாடலாசிரியர் அனந்த ஸ்ரீராம் இருவரையும் கழுத்து வரை கடற்கரை மணலில் புதைத்து வைத்திருப்பது போலவும், அருகிலேயே ஒரு ஹார்மோனிய பெட்டி இருப்பது போலவும், ஜிவி பிரகாஷின் கைகளை மட்டும் வெளியில் எடுக்க விட்டு அவரிடம் இயக்குனர் அனில் ரவிபுடி ஹார்மோனியத்தை கொடுத்து விட்டு வாசிக்கச் சொல்வது போலவும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இது குறித்து அனில் ரவிபுடி கூறும்போது, "ஜிவி பிரகாஷ் தற்போது ஹீரோவாக, தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் என் தயாரிப்பாளர் இவரை கை கால்களை கட்டி வேலை வாங்க சொன்னார். நான் வித்தியாசமாக இருக்கட்டும் என்று இப்படி மணலில் புதைத்து வைத்துள்ளேன்" என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!