
புதுப்பட புரமோஷன்களில் நயன்தாரா : ஆச்சரியத்தில் தமிழ் சினிமா
நயன்தாரா தற்போது கன்னடத்தில் "டாக்சிக்" படத்திலும், தமிழில் "ஹாய்" படத்திலும் நடித்துள்ளார். இரண்டு படங்களுமே அடுத்தவாரம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
"டாக்சிக்" படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தபோது நயன்தாரா கலந்து கொண்டு பேசினார். அடுத்து "ஹாய்" படத்திற்காக டிவி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளார்.
தான் நடித்த படங்களின் எந்தவிதமான புரமோஷனுக்கும் நயன்தாரா வர மாட்டார். "டாக்சிக்" படத்தின் நாயகன் யஷ் அழைத்ததால் அதில் கலந்து கொண்டேன் என்றார். "ஹாய்" படத்தில் நயன்தாராவும் ஒரு தயாரிப்பாளர். எனவே அப்படத்தை புரமோஷன் செய்கிறார் என்கிறார்கள்.
இனி வரும் காலங்களில் நயன்தாரா இது போலவே புரமோஷனுக்கு வருவாரா என்பதுதான் திரையுலகினரின் கேள்வியாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!