
அடுத்தமாதம் ரிலீஸாகிறது ‛நான் மிருகமாய் மாற
செப் 18, 2022
Advertisement
சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் ஒரு படத்தில் நடித்து வருகிறார். முதலில் இந்த படத்திற்கு ‛காமன் மேன்" என பெயரிட்டு இருந்தனர். பின்னர் அதை ‛நான் மிருகமாய் மாற" என மாற்றினர். அதிரடி ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் படம் அடுத்தமாதம்(அக்டோபர்) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி குறிப்பிடப்படவில்லை. சாதாரண மனிதன் ஒருவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படத்தை எடுத்துள்ளார் சத்ய சிவா.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…