முத்து என்கிற காட்டான் : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு
ஆக 05, 2025
Advertisement
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் கூட்டணியில் ‛ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி" போன்ற படங்கள் உருவாகின. அடுத்து இவர்கள் கூட்டணியில் ஒரு வெப் தொடர் உருவாகிறது. இதை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று படத்தின் டப்பிங் பணி துவங்கியதாக அறிவித்தனர். இந்நிலையில் இந்த வெப் தொடருக்கு "முத்து என்கிற காட்டான்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
இது கிராமத்து பின்னனியில் உருவாகும் பெரிய பட்ஜெட் வெப் தொடர் என்கிறார்கள். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் மற்றும் நடிகர் யோகி பாபு நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!