ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் மிஸ்டர்.எக்ஸ் படம்
ஏப் 04, 2026
எப்ஐஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் " மிஸ்டர்.எக்ஸ்". சரத்குமார், மஞ்சு வாரியர், அனைகா, ரைசா, அதுல்யா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
ஸ்பை த்ரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு மேல் இப்படம் தயாரிப்பில் உள்ளது. சமீபகாலமாக இந்த படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சித்து வருவதாக தகவல் நாம் தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில் மிஸ்டர்.எக்ஸ் படத்தை இம்மாதம் ஏப்ரல் மாதத்திற்குள் திரைக்கு வருகிறது என தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டரின் மூலம் அறிவித்துள்ளனர். மேலும், ஏப்ரல் 17ம் தேதியன்று மிஸ்டர்.எக்ஸ் படத்தை திரைக்கு கொண்டு வர விநியோகஸ்தர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!