வேட்டையாடு விளையாடு படத்திற்கு காலை 8 மணி காட்சி
ஜூன் 17, 2023
Advertisement
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்து 2006ம் ஆண்டு வெளியான படம் "வேட்டையாடு விளையாடு". பரபரப்பான க்ரைம் திரில்லராக வெளியான இந்தப் படம் தற்போது "ரீமாஸ்டர்ட்" செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் அடுத்த வாரம் ஜுன் 23ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்காக காலை 8 மணிக்கு சில சிறப்புக் காட்சிகள் நடைபெற உள்ளது. பொதுவாக புதிய படங்கள் வெளியாகும் போதுதான் இப்படி காலை 8 மணி காட்சிகள் நடைபெறும். ஆனால், 17 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படம் மீண்டும் வெளியாகும் போது இப்படி சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது அதிசயம் தான்.
ரி--ரிலீஸ் என அழைக்கப்படும் பழைய படங்களின் மறு வெளியீடுகள் கடந்த பல வருடங்களாகவே நின்று போய்விட்டது. இருந்தாலும் சில பழைய படங்களை ஒளி, ஒலியில் இந்தக் காலத் தொழில்நுட்பங்களுடன் சேர்த்து மீண்டும் வெளியிடுவதற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்து வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!