ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான்
ஏப் 22, 2025
Advertisement
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து கடந்த மார்ச் 27 அன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் ‛எல் 2 :எம்புரான்". இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நான்கு நாள் வசூலில் சக்க போடு போட்டது. ஆனால் படத்தின் மீது இருந்த விமர்சனத்தால் நாட்கள் செல்ல செல்ல வசூலின் தாக்கம் குறைந்து கொண்டே போனது. தற்போது இந்த திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவாரம் அதாவது ஏப்ரல் 24 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்நிறுவனம் வெளியிடுகிறது. இந்த திரைப்படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் 45 கோடிக்கு ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. மோகன்லால் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு ஓடிடியில் விலை போன படமாகவும் இது கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கேரளா வரலாற்றில் அந்த மாநிலத்தில் மட்டும் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் இந்த படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!