சந்திப்பு சர்ச்சை : சட்ட நடவடிக்கை எடுக்கும் அல்லு அர்ஜுன் குழு
பிப் 11, 2026
Advertisement
"புஷ்பா 2" படம் மூலம் பான் இந்தியா நடிகராகப் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். அவரை சந்திக்க வேண்டுமென்றால் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என 42 கண்டிஷன்களை அவரது குழுவினர் கொடுப்பார்கள் என காவேரி பரூவா என்ற பெண் விளம்பர ஆய்வாளர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த வீடியோ மிகவும் வைரலானது.
அல்லு அர்ஜுனை சந்திக்கும் போது அவரது கண்களைப் பார்த்து பேசக் கூடாது, கை குலுக்கக் கூடாது உள்ளிட்டவை அந்த 42 கண்டிஷன்களில் உள்ளவை என பேசியிருந்தார். இந்த வீடியோ மிகுந்த சர்ச்சையை நேற்று சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியது. பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூற ஆரம்பித்தனர்.
அதையடுத்து அல்லு அர்ஜுன் குழு அறிக்கை ஒன்றை உடனடியாக வெளியிட்டது. அதில், “அல்லு அர்ஜுன் பற்றிய சமீபத்திய சில கருத்துக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, உண்மையற்றவை ஆகும். அவர் எப்போதும் அதிகபட்ச கண்ணியத்துடனும் கவுரவத்துடனும் தன்னை நடத்திக் கொண்டுள்ளார். இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாகக் கருதுகிறோம். எங்கள் சட்டக் குழு பொறுப்புள்ளவர்களுக்கு எதிராக அவதூறு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது. சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதிலிருந்து விலகி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த அறிக்கை வந்த பின் காவேரி பரூவாவைப் பேட்டியெடுத்த யு டியூபர் ஸ்வீக்ரித்தி, தனக்கு பேட்டி தந்த விருந்தினர் மீது பி.ஆர். குழுவும், பாட் கணக்குகள் தாக்குதல் நடத்துவதால் அந்த வீடியோவை நீக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!