அடுத்தடுத்து மூன்று படங்களின் வெளியீட்டில் மமிதா பைஜு
ஜூலை 21, 2026
Advertisement
தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக தற்போது உள்ளவர் மமிதா பைஜு. அவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "டியூட்" படம் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றது. இந்த வருடத்தில் இதற்கு முன்பு தனுஷ் ஜோடியாக நடித்த "கர" படம் சரியாகப் போகவில்லை.
இந்நிலையில் அடுத்த ஒரு மாதங்களுக்கு மமிதா பைஜுவின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. நாளை மறுதினம் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் மமிதா. விஜய்யின் கடைசி படத்தில் நடித்துள்ள ஒரு பெருமை அவருக்குக் கிடைக்கும். படம் வெற்றிகரமான ஓடினால் அவருக்கான முக்கிய படமாக இப்படம் இருக்கும்.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி சூர்யா ஜோடியாக மமிதா நடித்துள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படம் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து ஏற்கெனவே எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. துறுதுறுப்பான ஒரு கதாபாத்திரத்தில் மமிதா நடித்துள்ளார் என்பது தெரிகிறது. இப்படம் அவருக்கு நிச்சயம் நல்ல பேரைப் பெற்றுத் தரும் என்கிறார்கள்.
ஆகஸ்ட் 21ல் மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக மமிதா நடித்துள்ள "பெத்லஹேம் குடும்ப யூனிட்" படம் வெளியாக உள்ளது. இரண்டரை வருடங்களுக்குப் பிறகு மமிதா நடித்து மலையாளத்தில் வெளியாக உள்ள படம் இது.
ஒரு மாதத்திற்குள்ளாக அடுத்தடுத்து மூன்று படங்கள், அதில் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இரண்டு, மலையாளத்தில் ஒன்று என மமிதா இப்போதைய போட்டியில் முந்தி வருகிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!